மின்வெட்டு தொடர்பான அறிவிப்பு!

மின்வெட்டு தொடர்பில் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது. நாளை(26) மற்றும் நாளைய மறுதினம்(27) இரண்டு மணித்தியாலம் மின்வெட்டினை நடைமுறைப்படுத்த இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. மின்வெட்டு நேரம் இதற்கமைய A,B,C,D,E,F,G,H,I,J,K,L,P,Q,R,S,T,U,V,W ஆகிய வலயங்களுக்குட்பட்ட பகுதிகளில் இரண்டு மணிநேரம் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் குறித்த பகுதிகளில் பகலில் ஒரு மணி நேரமும் இரவில் ஒரு மணி நேரமும் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.